Advertisment

ஸ்ரீரங்கம் கோவில் பணியாளர்களுக்கு தீ அணைப்பு பயிற்சி அளித்த தீயணைப்புத்துறையினர்!!

Firefighters train Srirangam temple staff to put out fires

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி விழிப்புடண் செயல்பட்டு தீயை அணைப்பது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. அதனை ஸ்ரீரங்கம் தீயணைப்பு நிலைய முன்னனி தீயணைப்பு வீரர் பெரியண்னன் தலைமையில்தீயணைப்பு வீரர்கள் கமல்சிங், பிரபு ஆகியோர் செயல்முறையில் செய்து காண்பித்து விளக்கினர்.

Advertisment

இதில் கோயில் அன்னதான சமையல் பணியாளர்கள், மடப்பள்ளி பணியாளர்கள், காவலர்கள், துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து கோயில் பணியாளர்களுக்கும் தீ தடுப்புஒத்திகை செய்து காண்பித்தார்கள். இதில் கோயில் இணை ஆணையர் செ. மாரிமுத்து, உதவி ஆணையர் கு. கந்தசாமி, உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், மேலாளர் உமா மற்றும் அனைத்து திருக்கோயில் பணியாளர்களும் கலந்துகொண்டனர்.

Advertisment

Srirangam temple trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe