/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cauvery-rescue.jpg)
திருச்சி ஜீயபுரம் பகுதியை அடுத்துள்ள மேல அல்லூரில் வசித்து வருபவர் துளசிமணி. இவர் அப்பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் இறங்கித் துவைத்துக் கொண்டிருந்த போது சற்று ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளார். காவிரியாற்றின் நடுப்பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தத்தளித்துள்ளார்.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஜீயபுரம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கண்டோன்மெண்ட் தீயணைப்புத் துறையினர் காவிரி ஆற்றில் தத்தளித்த துளசிமணியை மீட்டனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)