Advertisment

 firecrackers godown issue 4 people involved

கிருஷ்ணகிரியில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டை என்ற இடத்தில் பட்டாசு குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 15 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் அருகில் இருந்த 3 வீடுகள் தரைமட்டமாகின.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். கட்டட இடிபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளனரா?எனத்தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.