கஞ்சா போதையில் கொலைவெறி தாக்குதல்; பதற்றத்தில் மேல்காடு கிராமம்

Firecrackers explode in ganja intoxication; Home invasion and homicidal assault; Melkadu village in tension

சேலம் மாவட்டம் அருகேயுள்ள பெருமாபட்டி அடுத்துள்ளது மேல்காடு கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் விஜய். இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது வழியில்ஒருதரப்பு இளைஞர்கள் சாலையில் மது அருந்திவிட்டு பட்டாசுகளை வெடித்து ரகளையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனை விஜய் தட்டிக்கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞர்கள் தரப்பு கும்பல் மேல்காடு பகுதிக்குச் சென்று விஜய் வீட்டை தேடி தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர். ஆனால் விஜய் வீட்டிற்கு பதிலாக தவறாக புகைப்பட கலைஞராக இருந்த சதீஷ் என்பவர் வீட்டிற்குள் புகுந்து கண்மூடித்தனமாக வீட்டை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர். மேலும் சதீஷ் உட்பட வீட்டில் இருந்த ஆறு பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வீடு முழுக்க பொருட்கள் சேதமடைந்த நிலையில் வீட்டின் உள்ளே ரத்தம் பரவிக் கிடக்கும்வீடியோ காட்சிகளும் தற்பொழுது வைரலாகி வருகிறது.

தாக்குதலுக்குள்ளான அனைவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் மேல்காடு பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் கஞ்சா போதையில் இருந்ததாகவும் அவர்கள் நிதானம் இழந்து கொலை வெறிதாக்குதலில் ஈடுபட்டதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

police Salem TASMAC
இதையும் படியுங்கள்
Subscribe