Advertisment

வேதாரண்யம் பட்டாசு ஆலையில் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

Firecracker factory incident in Vedaranyam

Advertisment

வேதாரண்யத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள ஆயக்காரன்புலத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில், திடீரென ஏற்பட்ட விபத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியது. இதில் பட்டாசு ஆலை உரிமையாளரின் தந்தை மணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆலையில் பணியாற்றிய மேரி, சித்ரா, கலா, கண்ணன் உள்ளிட்ட பணியாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட அனைவரும் வேதாரண்யம் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாகத்தீயணைப்புத் துறையினருக்குத்தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். இந்த விபத்திற்கு மின்கசிவு காரணமா அல்லது ஊழியர்கள் செய்த தவறால் ஏற்பட்டதா என்பது தொடர்பாகப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலை வெடி விபத்தால் அந்தப் பகுதியே புகைமூட்டத்தில் மூழ்கியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

fire Nagapattinam vedharanyam
இதையும் படியுங்கள்
Subscribe