firecracker accident in Vellore

Advertisment

வேலூர் மாவட்டம் லத்தேரியில்பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் கடை உரிமையாளர் மற்றும் அவரது பேரக்குழந்தைகள் என மூன்று பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டம் லத்தேரி பேருந்து நிலையத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான பட்டாசு கடையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. முன்னதாக கடைக்கு அருகில் இருந்த பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் எரிந்து முழுவதும் நாசமான நிலையில், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்ததீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.

விபத்து நேரிட்ட பகுதியில் வேலூர் எஸ்.பி செல்வகுமார், ஆட்சியர் சண்முகசுந்தரம் ஆகியோர் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர் மோகன் அவரது பேரன் தனுஷ் (7 வயது), தேஜஸ் (6 வயது) ஆகிய முவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.