bus

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

Advertisment

தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்திரமாக மூடக்கோரி நடந்து வந்த போராட்டம் நூறாவது நாளை எட்டியைதையொட்டி, நேற்று 50 ஆயிரத்திறத்திற்கும் அதிகமான மக்கள் பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றனர். இதனை போலீசார் தடியடி நடத்தி தடுத்து நிறுத்த முயற்சி செய்ததால் இருதரப்பினருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

Advertisment

இதையடுத்து, போராட்டகாரர்களை போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசி கலைக்க முயற்சி செய்தனர். அதுவும் முடியாததால் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10 பேர் உயிரிழந்தனர். 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

tuty

இதனிடையே, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று காலை போலீசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் உடலை பிரதே பரிசோதனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடியிருந்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அங்கு திரண்டிருந்தனர். அப்போது பிரேத பரிசோனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை எழுப்பினர். இந்த நிலையில் அவர்களை கலைக்க போலீசார் இரண்டு ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் மருத்துவமனைக்கு முன்பு கூடியிருந்த மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் மருத்துவமனை வாயிலில் இருந்த அனைவரும் சிதறி ஓடினர்.

இதைதொடர்ந்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது. மற்றொரு பேருந்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டது. வாகனத்திற்கு தீ வைத்தது யார் என்று தெரியவில்லை.