தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்துஏற்பட்டுள்ளது.
பிரசவ வார்டுக்கு பின்புறம் வயர்களில் நெருப்புப் பற்றி எரிந்ததால் கர்ப்பிணிகள், தாய்மார்கள் வெளியேறினர். பிரசவத்துக்காக வந்திருந்த கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் மாடியிலிருந்து இறங்கி மைதானத்தில் திரண்டனர். இதனால் அங்கு சற்று பதற்றம் நிலவியது.