Advertisment

'தற்காலிக பணியாளர்களை நீக்குக...'-தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

 'Fire up temporary workers...' - Court orders Tamil Nadu government

கடந்த 2020 ஆம் ஆண்டுக்கு பிறகு அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக பணியாளர்களை நீக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisment

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வருபவர் சத்யா. 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் பணி வரன்முறை செய்யக்கோரி சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வாழ்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரத்தில் பணி வரன்முறை செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சென்னை நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்காலிக அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என தலைமைச் செயலாளர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன். ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துத்துறையின் கூடுதல் செயலாளர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில் தற்காலிக பணியாளர்கள் நியமனங்களை கைவிடுவதாக 2020 ஆம் ஆண்டு 28 ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் நியமிக்கப்பட்ட அனைத்து தற்காலிக பணியாளர்களும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். தற்காலிக பணியாளர்கள் நியமனம் செய்வதற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு யாரேனும் நியமிக்கப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை நீக்கம் செய்வது மற்றும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து மார்ச் 17 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யக்கோரி தமிழக அரசு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

verdict highcourt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe