Advertisment

இங்கிலாந்திலிருந்து திருச்சி விமானநிலையத்திற்கு வந்த அதிநவீன தீயணைப்பு வாகனம்!

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு விதமான வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அதிநவீன தீயணைப்பு இயந்திரம் ஒன்று புதிதாக வாங்கியுள்ளார்கள்.

Advertisment

fire

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திருச்சி விமான நிலையத்திற்கு இங்கிலாந்து நாட்டிலிருந்து புதிய தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வாகனம் ரூபாய் 4.10 கோடியில் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனமானது 6000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரினை பயன்படுத்துவதற்கும் இதன் பயன்படுத்தும் வேகமானது அதிக அளவில் இருக்கும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த வாகனத்தின் மூலம் தீப்பற்றும் பகுதிகளில் தீ பரவாமல் மிக விரைவான முறையில் அணைப்பதற்கான உபகரணங்கள் இதில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனமானது விமான நிலையத்தில் ஏற்படும் அவசர காலங்களில் பயன்படுத்துவதற்கும் தீ பரவுவதை தடுக்கும் முறையும் இதில் அமைக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வாகனமானது இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மும்பையிலிருந்து திருச்சிக்கு தனி லாரி மூலம் கொண்டுவரப்பட்டது.

England fire fire service Tiruchirappalli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe