Fire police immediately extinguished fire transformer cable

கரூர் மாவட்டம் புகழூர் காந்திநகர் பகுதியில் மின்மாற்றியில் கேபிள் பழுது காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் சிறிது நேரம் மின் விநியோகம் தடைப்பட்டது.

Advertisment

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் குடியிருப்புக்கு முன்புறம் அமைந்துள்ள மின்மாற்றியில் கேபிள் பழுது காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ பற்றி எரிய ஆரம்பித்து அதன் பாகங்கள் கருகத் தொடங்கின.

Advertisment

அப்போது அவ்வழியாக வந்த புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்து, உடனடி நடவடிக்கையில் இறங்கினார். தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துமின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

தீ விபத்து காரணமாக சிறிது நேரம் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சுமார் 30 நிமிடங்களுக்குள் கேபிள் பழுதுகளை சரி செய்துமீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பெரும் தீ விபத்தை தவிர்த்தனர்.