மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள வெள்ளக்கல் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் திடீரென தீப்பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை வெள்ளக்கல் பகுதியில் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வரும் நிலையில் அந்த பகுதியில் விவசாய நிலமும் உள்ளது. இந்நிலையில் காய்ந்த புற்கள் திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில் தீ அருகில் இருந்த வயல் பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் காணப்படுகிறது.
உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகிலேயே விமான நிலையம் இருக்கும் நிலையில் விண்ணை முட்டும் அளவிற்கு புகை சூழ்ந்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.