bus

பா.ம.க முன்னணி பொறுப்பாளர்களில் ஒருவரும், வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி குரு நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அப்பல்லோவில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 25-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் காடுவெட்டியில் இன்று காலை அடக்கம் செய்யப்பட்டது.

அதேசமயம் காடுவெட்டி குருவின் சாவின் எதிரொலியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் தாக்குதலுக்கு ஆளாகின.

Advertisment

இந்நிலையில் புதுச்சேரியில் இன்று இரவு ஒரு அரசு பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற தமிழக அரசு பேருந்தை கனகசெட்டிகுளத்தில் மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்பு பயணிகளை கீழே இறக்கி விட்ட அந்த மர்ம நபர்கள் பேருந்துக்கு தீ வைத்து தப்பியோடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மர்ம நபர்களை காலாப்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.