
சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நகைக்கடை கட்டடத்தில்பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள்.
Advertisment
Follow Us