Fire incident at Vellakal garbage dump

Advertisment

மதுரை வெள்ளக்கல் பகுதியில் குப்பைக் கிடங்கில்ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை வெள்ளைக்கல் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில்கழிவு பொருட்கள் சுத்திகரிப்பு பணிகள் இன்று மதியத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், திருப்பரங்குன்றம் தீயணைப்பு படையினர் வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சிக்குஉட்பட்ட பகுதிகளில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், 100 வார்டுகளின் குப்பைகள் மதுரை விமான நிலையத்தை ஒட்டியுள்ள வெள்ளக்கல் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வானுயர கரும்புகை அந்தப் பகுதியில் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.