மனைவியை கண்டுபிடித்து தராததால் கணவர் தீக்குளிப்பு   

fire incident in thiruchy

காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தராததால் கணவர் தீக்குளித்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் காவல்நிலையம்முன்பு ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். இதில் தீக்குளிக்க முயன்றவர் வைரிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம் என்று தெரியவந்தது. ஞானபிரகாசம் அவருடைய மனைவியை காணவில்லை என புகாரளித்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் மனைவியைதேடி கண்டுபிடித்து தராததால் விரக்தியில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்துள்ளார். தற்போது ஞானபிரகாசம் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

police thiruchy wife
இதையும் படியுங்கள்
Subscribe