fire incident n sivakasi

கோப்புப்படம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (12.02.2021) ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் உயிரிழப்பு என்பது 19 ஆக அதிகரித்துள்ளது.

Advertisment

தமிழகம் மட்டுமில்லாது தேசிய அளவிலான தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெடிவிபத்தில் 30க்கும் அதிகமானோருக்குப் பலத்த காயமும்,பலருக்கு 80% தீக்காயமும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இன்று சிவகாசி காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில்வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்றுஅச்சங்குளம் கிராமத்தில் ஏற்பட்டவிபத்து சோகத்தில் இருந்து மீளாத நிலையில், இன்றும்பட்டாசு ஆலையில்விபத்து நேர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.