Fire incident in Chennai LIC building

Advertisment

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று விடுமுறை என்ற நிலையில் எல்ஐசி கட்டிடத்தின் 14 வது மாடியின்மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புவீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இன்று விடுமுறை என்பதால் ஊழியர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அருகில் உள்ளதிருவல்லிக்கேணி உள்ளிட்ட நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு தீயை அணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.