Advertisment

ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

fire incident in a chemical warehouse at chennai

Advertisment

சென்னையை அடுத்துள்ள புழல் - அம்பத்தூர் சாலையில் உள்ள சூரப்பட்டு என்ற இடத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த அனந்த ராமகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான ரசாயன குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் நள்ளிரவு 12 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் குறித்து புழல் காவல் துறையினருக்கும், செங்குன்றம் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வந்த 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் உள்ளே வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள், உடை மற்றும் வாகன டயர்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இருப்பினும் தீ மளமளவென எரிந்ததால் தீயைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமமாக இருந்ததால் கூடுதலாக அம்பத்தூர், ஆவடி, கொளத்தூர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையத்தில் உள்ளதீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

police fire Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe