Advertisment

தீ பிடித்த குப்பை கிடங்கு... 10 மணிநேரமாக போராடும் தீயணைப்புதுறை!

Fire Garbage Depot ... Fire Department fighting for 10 hours!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சியில் உள்ள குப்பை கிடங்கில் கிட்டத்தட்ட 10 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்துவரும் நிலையில் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியுள்ளது.

Advertisment

சீர்காழி ஈசானியத்தெருவில் உள்ள குப்பைக்கிடங்கில் நகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துகிடக்கும் நிலையில், இன்று அதிகாலை நான்கு மணிக்கு திடீரென குப்பை கிடங்கில் தீ பிடித்துள்ளது. மளமளவென எரிந்த தீ குப்பைக்கிடங்கின் அனைத்து பகுதியிலும் பரவி தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காலையிலிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். கடந்த 10 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்க தீயணைப்பு துறை போராடி வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியே புகை மூட்டத்தில் மூழ்கியது.

Advertisment

fire Garbage control Mayiladuthurai sirkazhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe