காவிரி ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட சிறுவனை, தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

Advertisment

fire fighters rescued a drowning boy

ஆடி 18 ஆம் நாள் விழாவையொட்டி, ஈரோட்டை சேர்ந்த திருமூர்த்தி, அவரது 9 வயது மகன் கிருஷ்ணன் ஆகியோர் பட்லூர் காவிரியாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது நிலைதடுமாறி இருவரும் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு துறையினர் இதனை கண்டதும் விரைந்து செயல்பட்டு ஆற்றில் குதித்து இருவரையும் மீட்டுள்ளனர்.

Advertisment

இதில் சிறுவன் கிருஷ்ணன் தண்ணீரை குடித்து மயக்க நிலையில் இருந்ததையடுத்து, அங்கிருந்த தீயணைப்புத்துறை வீரர்கள் உடனடியாக அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்தனர். அந்த சிறுவன் மூச்சு விடமுடியாமல் தவித்த நேரத்தில் வாயோடுவாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் அந்த சிறுவனை காப்பாற்றினார். இந்த சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களின் செயல்பாட்டை பாராட்டி வருகின்றனர்.