சிக்னல் கட்... வாலிபரின் செயலால் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர்

 Fire department rushed by man's action

கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில்இரும்புக் கடையில் பணியாற்றி வருபவர் இளங்கோ (44). புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் இவர் மதுபோதையில் இருந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு அன்று அவரது செல்போனில் சிக்னல் கிடைக்காமல் இருந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கடைக்கு அருகில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள 100 அடி உயரமுள்ள செல்போன் கோபுரத்தில் ஏறினார். இந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் மற்றும் கரூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சுமார் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். திடீரென்று மழை பெய்ய துவங்கியதன் காரணமாக செல்போன் டவரில் ஏறிய நபர் கீழே இறங்கினார்.

police tower trichy
இதையும் படியுங்கள்
Subscribe