Advertisment

வணிக வளாகத்தில் தீ விபத்து; சவுகார்பேட்டையில் பரபரப்பு

 A fire at a commercial complex; Chaos in Chaukarpet

Advertisment

சென்னை சவுகார்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சவுகார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான வணிக வளாகம் ஒன்றில் நகைக் கடைகள், ஜவுளிக் கடைகள் இயங்கி வந்தன. சுமார் பத்துக்கும் மேற்பட்ட கடைகள் அந்த வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், இன்று அதிகாலையில் தீப்பற்றி எரிவதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். பத்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயைத்தொடர்ந்து அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அருகிலிருந்த டிரான்ஸ்ஃபார்மரில் ஏற்பட்ட தீ கடைக்குப் பரவியதாகத்தகவல்கள் வெளியாகி உள்ளன. பரபரப்பான சாலையில் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Chennai fire incident
இதையும் படியுங்கள்
Subscribe