Advertisment

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

சென்னை மண்ணடியில் உள்ள 5 மாடிகள் கொண்டபிஎஸ்என்எல்அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற 20 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்து வருகின்றனர்.

Advertisment

 Fire at Chennai BSNL office!

ஐந்து மாடிகளிலும் தொலைபேசி அலுவலகங்கள் செயல்படுகின்றநிலையில், குறிப்பாக தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்தநிலையில் அந்த அலுவலகத்தில் இருக்கக்கூடிய மின்சாதனங்களில் ஏற்பட்ட தீ விபத்தினால் தற்போது தரை தளத்திலும், முதல் தளத்திலும் பிடித்து எரிந்து வருகிறது. தீயைஅணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

Advertisment

முதல் தளத்தில் முழுவதுமாக ஒயர்கள், மின்சார பெட்டிகள் அதிகமாக இருப்பதன் காரணமாக தீ ஒரு பக்கத்தில் அணைக்க மற்றொருபுறத்தில் தொடர்ந்து தீயானதுப் பற்றி எரிந்து வருகிறது. தீ முழுவதும் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

இந்தப் பகுதியைப் பொறுத்தவரையில் மத்திய அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள் மற்றும் மிக நெருக்கடி மிகுந்த பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து இங்கிருந்து அதிகமான புகையானது இன்று காலையில் இருந்து வெளியேறி அதனால் சுற்றியுள்ள பகுதிகளில் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai BSNL fire
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe