Advertisment

சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து; சூழும் கரும்புகையால் பரபரப்பு 

Fire at CBCL; Thrill by the cane

Advertisment

சென்னை மணலியில் உள்ள அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை மணலியில் மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவனம் உள்ளது. இந்த எண்ணெய் நிறுவனத்தில் இருந்துதான் எண்ணூர் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் சேர்ந்தது தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது வரை எண்ணெய் கழிவுகளை அள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் உள்ள ஊழியர்கள், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் வானுயர கரும் புகை சூழ்ந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஏற்கனவே எண்ணெய் கழிவுகள் கடலில் கலந்திருக்கும் நிலையில் அதே நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு அந்த பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளது ஒரு வித பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Chennai cpcl
இதையும் படியுங்கள்
Subscribe