style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சேலம் மாவட்டம் ஆத்தூரைஅடுத்த கருமந்துறை என்ற இடத்தில் சேலத்தில் இருந்து கருமந்துறை செல்லக்கூடிய கூட்டுரோட்டில் இருசக்கர வாகனத்தில்சாலையை கடக்க முயன்ற கோவில்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மீது அவ்வழியே வந்தபேருந்து மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த பகுதியில் திரண்டு விபத்து ஏற்படுத்திய அந்த பேருந்தை வழிமறித்து, சிறைபிடித்து பேருந்து மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதனால் அந்த பேருந்தில் இருந்த 30க்கும் மேற்பட்டபயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்து நடந்த உடனே அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார் ஆனால் விபத்து நடந்தும்பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த மக்கள்அந்த பேருந்தை விரட்டி சிறைப்பிடித்து பேருந்துக்கு தீ வைத்தனர்.இந்த சம்பவம் தற்போது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.