Advertisment

கிரேன் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து

A fire broke out in a truck carrying a crane

Advertisment

தூத்துக்குடியில் கிரேன் ஏற்றி வந்த லாரி ஒன்று நடு சாலையில் தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் காற்றாலை நிறுவனத்திற்கு சொந்தமான லாரி ஒன்று கிரேன் ஒன்றை ஏற்றிக்கொண்டு மதுரையிலிருந்து தூத்துக்குடி நோக்கிச்சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது குறுக்குசாலை என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் திடீரென தீ பிடித்தது. பின்பகுதியில் எரியத் தொடங்கிய தீயானது லாரியின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.

உடனடியாக லாரி ஓட்டுநர் இதை அறிந்து லாரியை நிறுத்தி தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் முடியாததால் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இருப்பினும் லாரி முழுவதும்எரிந்து சேதம் அடைந்தது. குறுக்குசாலை பகுதியில் நடந்த இந்த எதிர்பாராத தீ விபத்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Thoothukudi lorry
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe