Advertisment

பட்டப்பகலில் தீ பற்றி எறிந்த மெக்கானிக் ஷாப்; திருச்சியில் பரபரப்பு

fire broke out mechanic shop Trichy

Advertisment

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் பாலசமுத்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் அருள் முருகன். இவர் தொட்டியத்தில் மாதா பள்ளி எதிரில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இன்று காலை சுமார் 11 மணியளவில் தனது கடையை திறந்து வைத்து விட்டு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அவரது கடை தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து காவல்துறைக்கும், முசிறி தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. முசிறி தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினர், நிலைய அலுவலர் அந்தோணி தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது . இருப்பினும் கடையில் இருந்த 7 டூ வீலர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தீயில் எரிந்து நாசமாகியது.சேத மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் ஆகும்.விபத்துக்கு குறித்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe