A fire broke out in a car showroom

கோவை மாவட்டம் சூலூரில் கார் ஷோரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் பத்துக்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகியது.

Advertisment

கோவை மாவட்டம் சூலூர் அருகே திருச்சி சாலையின் அருகே மாருதி ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. பிரவீன் குமார் என்பவருக்கு சொந்தமான இந்த கார் ஷோரூமில் நேற்று வழக்கம் போல செவ்வாய்க்கிழமை இரவு ஊழியர்கள் பணியை முடித்துவிட்டு பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் சாலையில் செல்பவர்கள் ஷோரூம் கட்டிடத்துக்குள் இருந்து புகை வருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisment

உடனடியாக ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சென்று பார்த்த பொழுது உள்ளே தீப்பற்றி இருந்தது தெரியவந்தது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட கார்கள் வெளியே கொண்டுவரப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்ட கார்கள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். அதிகாலை 3 மணியில் கார் ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்துஅங்குபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.