Advertisment

வேளச்சேரியில் 9 அடுக்கு கட்டடத்தில் தீ விபத்து

Fire broke out in a 9 storied building in Velechery

சென்னை வேளச்சேரியில் கட்டப்பட்டு வரும் ஒன்பது மாடிக் கட்டடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சென்னை வேளச்சேரியில் பறக்கும் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள வேளச்சேரி மேம்பாலத்திற்கு அருகேயான பிரதான சாலையில் கட்டப்பட்டு வந்த 9 அடுக்கு மாடிக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த பெயிண்ட், தின்னர் ஆகியவற்றில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ கொழுந்துவிட்டு எரிவதால் கரும்புகை வெளியேறி வருகிறது. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த கட்டடத்திற்கு அருகே சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. அந்த கட்டடத்தில் வேலை பார்த்து வந்த பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். வேளச்சேரி மற்றும் கிண்டி பகுதியிலிருந்து நான்குக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

fire velacherry Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe