Advertisment

கிணற்றில் விழுந்த இளைஞர்களை உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்..!

The fire brigade rescued the youth who fell into the well ..!

Advertisment

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞர்களைப் பலமணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். துறையூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ், ராஜசேகர் ஆகிய இருவரும் மது போதையில் துறையூர் பெரிய ஏரி பகுதியில் உள்ள 130 அடி ஆழமுள்ள கிணற்றில்தவறி விழுந்துள்ளனர்.

அவர்களுடன் வந்தசோனி, தேவா ஆகிய இரண்டு நண்பர்களும் கிணற்றில் விழுந்த அவர்கள் எப்படியும் பைப்பை பிடித்து மேலே ஏறி வந்துவிடுவார்கள் என்று காத்திருந்த நிலையில், பலமணி நேரமாகியும் அவர் வரவில்லை.

The fire brigade rescued the youth who fell into the well ..!

Advertisment

இதனால், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், 30 அடி தண்ணீர் நிறைந்திருந்த அந்தக் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்களையும் உயிருடன் மீட்டுள்ளனர்.

trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe