Advertisment

ஆல் இந்தியா ரேடியோவிற்கு சொந்தமான இடத்தில் தீ விபத்து

nn

சென்னையில் ஆல் இந்தியா ரேடியோவிற்கு சொந்தமான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னை அடுத்த திருவமுல்லைவாயல் பகுதியில் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷனுக்கு சொந்தமான இடம் இருக்கிறது. சுமார் 140 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தில் ஆல் இந்திய ரேடியோவிற்கு சொந்தமான டவர்கள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்த பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Advertisment

இதனால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆவடி, அம்பத்தூரில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வனப்பகுதி போல் காணப்படும் வெட்டவெளி பகுதியில் தீப்பிடித்ததால் அக்கம் பக்கத்தில் குடியிருப்புகளுக்கு தீ பரவலாம் என்ற அச்சம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பாக போலீசார்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

fire Chennai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe