Fire breaks out at matchbox factory

விருதுநகரில் தீப்பெட்டி தொழிற்சாலையில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் திடீரென நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். நள்ளிரவு நேரத்தில் விபத்து நிகழ்ந்தால் அங்கு பணியாளர்கள் இல்லாததால் உயிர்ச் சேதங்கள் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. நள்ளிரவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.