Advertisment

சென்ட்ரல் ரயில் நிலைய கார் பார்க்கிங்கில் தீ விபத்து

 Fire breaks out at Central Railway Station car park

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தும் இடத்தில் கார் எரிந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள கார் பார்க்கிங்கில் தாம்பரத்தைச் சேர்ந்த ஆல்வின் என்பவர் இன்று மதியம் காரை பார்க்கிங் செய்துவிட்டு வால்டாக்ஸ் சாலையிலிருந்த கடைக்கு சென்றுள்ளார். அப்பொழுது காரின் முன்பகுதியில் திடீரென புகை வெளியானது. தொடர்ந்து கார் பற்றி எரியத்தொடங்கியது. உடனடியாக பார்க்கிங்கில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியாததால் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. வேப்பேரி மற்றும் வண்ணாரப்பேட்டை தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்து காரில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி ஆல்வினை தொடர்பு கொண்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

car police rescued
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe