Fire at the bike showroom!

Advertisment

கரூர் - கோவை சாலையில் அமைந்துள்ள பஜாஜ் பைக் ஷோரூம் கம்பெனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டு பல கோடி மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட புதிய வாகனம் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் - கோவை நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான பஜாஜ் இருசக்கர வாகன ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 10 மணி அளவில் பயங்கர தீ விபத்து எற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த கடைக்கு அருகில் இருந்தவர்கள் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த 3 வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், ஷோரூமில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீவிபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.