Skip to main content

வங்கியில் தீ விபத்து; வேளச்சேரியில் பரபரப்பு

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
Fire at Bank of India Bank; The excitement in Velachery

சென்னை வேளச்சேரியில் உள்ள 'பேங்க் ஆப் இந்தியா' வங்கியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி பிரதான சாலை தண்டீஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது 'பேங்க் ஆப் இந்தியா' வங்கி. அருகிலேயே ஏடிஎம் மையமும் இருக்கிறது. இந்தநிலையில் இங்கு கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக திடீரென அதிக அளவிலான புகை வெளிப்பட்டது. அருகில் வீடுகள், வணிக நிறுவனங்கள் ஆகியவை அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. திருவான்மியூர், கிண்டி, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது. தீயணைப்பு வீரர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை நீடித்தது. தற்பொழுது தீயணைப்பு கருவிகளை முதுகில் கட்டிக்கொண்டு வீரர்கள் உள்ளே சென்றுள்ளனர். புகைப்போக்கியை பொருத்தி தற்பொழுது புகை வெளியேற்றப்பட்டு வருகிறது. வங்கியின் எந்த பகுதியில் தீப்பற்றியுள்ளது என்பது தெரியாமல் தற்பொழுது வரை தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர். அதிகப்படியான புகை வெளியேற்றதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

14 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
 Rain alert for 14 districts

தமிழகத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத்  தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மற்றும் கோவையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் இரவு 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியான அறிவிப்பின்படி கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

சட்டமன்ற தேர்தலுக்குத் தயாராகும் திமுக; இன்று முக்கிய ஆலோசனை!

Published on 21/07/2024 | Edited on 21/07/2024
DMK prepares for assembly elections Important advice today

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவில் ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு அதற்கான பணிகளை இந்த குழு மூலம் மேற்கொள்ளப்படும் என நேற்று (20.07.2024) அறிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின்  கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.

அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் - அமைப்பு ரீதியான சீரமைப்புகளைக் திமுக தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘ஒருங்கிணைப்புக்குழு’ அமைக்கப்படுகிறது. அதன்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளைப் பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் ஒருங்கினைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று (21.07.2024) மாலை நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.