Advertisment

ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

Fire at ATM center

Advertisment

திருவள்ளூரில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏடிஎம் மையம் முழுவதும் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ளது கனகம்மாசத்திரம் பகுதி. அங்கு தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வந்தது. வங்கி சார்பாக 5 லட்சம் ரூபாய் அந்த ஏடிஎம் மையத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை சுமார் 5:30 மணியளவில் மின்கசிவு காரணமாக ஏடிஎம் மையத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டது. இதில் முழுவதுமாக ஏடிஎம் மையம் எரிந்து சேதமானது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ATM thiruvallur
இதையும் படியுங்கள்
Subscribe