பட்டாசு உற்பத்திக்கு பேரியம் நைட்ரேட் எனப்படும் பச்சை உப்பு பயன்படுத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 13-ஆம் தேதியிலிருந்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டு, நாளொரு போராட்டமும் பொழுதொரு குமுறலுமாக கதறி அழுகிறது கந்தகபூமி.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி, விருதுநகரில் பல்லாயிரக்கணக்கான பட்டாசுத் தொழிலாளர்கள் பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி, விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனாலும், சட்ட ரீதியான தீர்வு கிடைக்காத நிலையில், பட்டாசு ஆலைகள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால், பட்டாசு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், கெமிக்கல் டீலர்கள், டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள், மற்றும் பட்டாசுத் தொழிலாளர்கள் ஒன்றுகூடி, தொடர் போராட்டம் நடத்துவது என்று முடிவெடுத்தனர்.
காவல் துறையினரின் அனுமதியுடன், தொடர் போராட்டத்தை சிவகாசியில் இன்று துவக்கிவிட்டனர். பட்டாசுத் தொழில் முடங்கிவிட்டதால், சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக, பட்டாசு ஆலைக்குச் சொந்தமான பேருந்துகளில் ஏறி சிவகாசி – திருத்தங்கல் சாலையில் உள்ள சோனி மைதானத்தை நோக்கி பலரும் வந்த வண்ணம் உள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
மத்திய சுற்றுச்சூழல்துறை, பட்டாசுத் தொழிலில் பேரியம் (பச்சை உப்பு) தடையை நீக்க வேண்டும். சரவெடி தயாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு, பட்டாசுத் தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதி 3(3பி) விலக்கு பெற சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும். 95 நாட்களாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே போராட்டம் நடத்துபவர்களின் கோரிக்கையாக உள்ளது.
‘SAVE FIREWORKS; SAVE TRADITION; SAVE SIVAKASI.’ என சிவகாசியில் எங்கு பார்த்தாலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ‘பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்! வெற்றி பெறுவோம்!’ என்பதே போராட்டம் நடத்துபவர்களின் முழக்கமாக இருக்கிறது.