mishra

Advertisment

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியில் குரங்கணி கொழுக்கு மலைக்கு சுற்றுலா பயணிகள் 39பேர் ட்ரெக்கிங் சென்றனர். அப்போது குரங்கணி மலை பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டு தீயில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர். பலர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த தீ விபத்து பற்றி விசாரிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை விசாரணை ஆணையராக நியமித்தார். இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்த அதுல்ய மிஸ்ரா தேனி வந்தவர். அங்குள்ள அதிகாரிகளிடம் முதல் கட்டமாக ஆலோசனை நடத்தினார்.

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய மிஸ்ரா... தீ விபத்து நடந்த குரங்கணி கொழுக்குமலைக்கு சென்று தீ பிடித்த பகுதிகளை பார்வையிட்ட பின் விசாரணை நடத்த இருக்கிறேன். அதன் பிறகு அங்குள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கொண்டு அப்பகுதி மக்களிடம் புகார் மனுக்கள் வாங்கி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும்.

Advertisment

அதோடு வனத்துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தீ விபத்தில் சிக்கி தப்பியவர்களிடமும் விசாரணை நடத்திய பின் மதுரை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்வர்களிடமும் விசாரணை செய்யப்படும். ஏற்கனவே இந்த தீ விபத்தில் இறந்தவர்கள் நீதிபதியிடம் வாக்கு மூலம் கொடுத்து இருக்கிறார்கள் அதையும் பெற்று விவாதிக்க இருக்கிறேன். அதன் இறுதியாக மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்தபின் இரண்டு மாதங்களுக்குள் இந்த தீ விபத்துக்கான அறிக்கையை முதல்வரிடம் கொடுக்கப்படும் என்று கூறினார்.