Advertisment

நட்சத்திர விடுதியில் தீ விபத்து! 

fire accident in Trichy Star hotel

திருச்சி தில்லைநகர் அருகில் தனியார் நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் அந்தக் கட்டத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அதனை சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

Advertisment

திருச்சி மெகா ஸ்டார் தியேட்டர் அருகில், பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு பின்னால் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் மின்கசிவு காரணமாக நான்காவது மாடியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்தத் தீ மளமளவென நான்காவது தளம் முழுவதும் பரவியது. விடுதி நிர்வாகம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தது.

Advertisment

அந்தத் தகவலின் அடிப்படையில் திருச்சி ஸ்ரீரங்கம், கண்டொன்மெண்ட் உள்ளிட்ட தீயணைப்புத் துறை அலுவலகங்களில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டு சுமார் 20 தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதங்கள் ஏதுமில்லை என்றாலும் ஹோட்டலின் 4 வது தளம் முழுவதும் எரிந்துள்ளதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe