Advertisment

குடிசை வீட்டில் பற்றிய தீ.. அலறி துடித்த மூதாட்டி! 

Fire accident in thiruvanmiyur

சென்னை, திருவொற்றியூர் அருகே உள்ள ராஜா சண்முகம் நகர் பகுதியில் ஒரு வீட்டின் மேல் தளத்தில் குடிசை வீடு ஒன்று இருந்துள்ளது. இந்த வீட்டில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வாடகைக்கு குடியிருந்துவருகிறார். இந்நிலையில் இன்று, தீபாவளியின் காரணமாக அனைவரும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிவருகின்றனர். இதில், இந்த வீட்டின் அருகே இருந்தவர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர். அப்போது அதில் இருந்து பறந்த தீ அந்த குடிசை வீட்டின் மீது பட்டு, வீடு முழுவதும் மளமளவென தீ பரவியுள்ளது.

Advertisment

இதில் அந்த வீட்டினுள் இருந்த மூதாட்டி அலறி கத்தியுள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு கீழ் தளத்தில் இருந்து வீட்டின் உரிமையாளர் மேலே சென்று பார்த்தபோது வீட்டில் அதிகளவில் பரவியிருந்தது. உடனடியாக அவர் உள்ளே சென்று அந்த மூதாட்டியை மீட்டுள்ளார். இதில், அந்த மூதாட்டிக்கும், காப்பாற்ற சென்ற வீட்டின் உரிமையாளருக்கும் பலத்த தீக் காயம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் தீப்பற்றிய தகவலை அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், தீ விபத்தில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

thiruvanmiyur
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe