fire accident on thiruchy market

Advertisment

திருச்சி காந்தி சந்தை அருகே உள்ள காலி மைதானத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் காய்கறி சரக்கு லாரிகள் நிறுத்தப்பட்டு காய்கறி மூட்டைகள் ஏற்றி இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை அங்கு நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த பழைய மினிவேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான பிளாஸ்டிக் பழக் கூடைகளை அப்புறப்படுத்தினர். ஆயினும் மளமளவெனப் பரவிய தீயில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், சைக்கிள்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. மேலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றும் இந்த விபத்தில் சேதமடைந்தது.