Advertisment

காலணி தொழிற்சாலையில் தீ விபத்து- விபத்தா? நாடகமா?

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீராக்கோயில் அருகில் தனியாருக்கு சொந்தமான ஒரு காலணிதொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் சில மாதங்களாக பணி நடைபெறாமல் பூட்டி வைக்கப்பட்டிருந்துள்ளது. கடந்த வாரத்தில் இந்த தொழிற்சாலையில் மராமத்து பணி நடந்துள்ளது. தற்போது என்ன காரணமோ மராமத்து பணிகள்நின்றுள்ளது.

Advertisment

 fire accident in Shoe factory

இந்த தொழிற்சாலைக்குள் ஜூலை 10 ந்தேதி காலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப்பார்த்துவிட்டு அதிர்ச்சியான அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து ஆம்பூர் தீயிணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

Advertisment

 fire accident in Shoe factory

தொழிற்சாலையின் முன்பக்க கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள், மின் சாதன பெட்டிகள் என பல சுமார் 10 லட்சத்துக்கும் வரையில் பொருட்கள் சேதம் அடைந்துள்ளன என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீ எப்படி ஏற்பட்டது,விபத்தா அல்லது திட்டமிட்டு யாராவது தீ வைத்தார்களா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vellore Fire accident
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe