Skip to main content

பழனி முருகன் கோவிலில் திடீர் தீவிபத்து 

Published on 13/04/2019 | Edited on 13/04/2019
fire accident in Palani Murugan Temple

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் அன்னதான கூடத்தில் கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

 

தீ அணைக்கப்பட்ட நிலையில் காயமடைந்த சமையலர் முத்துசாமி என்பவர் மீட்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Incident happened 6 people for Terrible fire at hotel in patna

பீகார் மாநிலம், பாட்னா சந்திப்பு ரயில் நிலையம் அருகே தனியார் அடுக்குமாடி ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஹோட்டலில் இன்று (25-04-24) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த சிலர் சிக்கினர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு அங்கு ஏற்பட்டிருந்த தீயை அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தப் பயங்கர தீ விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அங்கு படுகாயமடைந்திருந்த 20க்கும் மேற்பட்டவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து, இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

பழனி முருகன் கோவிலுக்கு நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Procurement of native sugar for Palani Murugan temple

பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, நேற்று நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1,610 மூட்டைகள் நாட்டுச் சர்க்கரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.அதில், 60 கிலோ எடையிலான ஒரு மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,570க்கும், அதிகபட்சமாக ரூ. 2,600க்கும் விற்பனையானது. சராசரி விலையாக ரூ. 2,580க்கு விற்பனையானது.

இரண்டாம் தரம், குறைந்தபட்ச விலையாக ஒரு மூட்டை ரூ. 2,510க்கும், அதிகபட்சமாக ரூ. 2,520க்கும், சராசரி விலையாக ரூ. 2,520க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 85 ஆயிரத்து 20 கிலோ எடையிலான 1,417 நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் விற்பனையாகின.இதன் விற்பனை மதிப்பு ரூ. 36 லட்சத்து 16 ஆயிரத்து 300 ஆகும் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.