
சென்னையில் பழைய கார் உதிரிபாகம் வைக்கப்பட்டிருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயலில்உள்ள பழைய கார் கார் உதிரிபாகம் வைக்கப்பட்டிருந்த குடோனில் போடப்பட்டிருந்த சினிமா செட் அமைக்கும் இடத்தில் திடீரென தீ பிடித்தநிலையில் தீ குடோன் முழுக்க பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்து காரணமாக அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த சம்பவம்மதுரவாயலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us