Advertisment

சென்னையில் தீ விபத்து! (படங்கள்) 

சென்னை, அண்ணா நகர் 6வது அவென்யூவில் உள்ள தனியார் தங்க நகை கடன் மற்றும் பைனான்ஸ் நிறுவனகட்டடத்தின் முதல் மாடியில் இயங்கி வரும்ஐடி கம்பெனி மற்றும் இரண்டாவது மாடியில் உள்ள இந்தியா புல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆகிய அலுவலகங்களில் இன்று பகல் நேரத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைக்க முயற்சித்து, ஒருமணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பெரும் ஆபத்தைத்தடுத்தனர். அதேபோல், தீ பரவிக்கொண்டிருந்தபோது, கிரேன் மூலம் அந்தக் கட்டடத்தில் சிக்கியிருந்தவர்களை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Advertisment

இதனையடுத்து, தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விபத்து ஏற்பட்ட கட்டடம் அருகே உள்ள தனியார் மருத்துவமனை, அலுவலகங்களில் பணி புரியும் ஊழியர்கள் ஒன்றிணைந்து கை தட்டி ஆரவாரம் செய்து வாழ்த்து தெரிவித்தனர். தீக்குள் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டு, உதவிய தீயணைப்புத்துறையின் கிரேன் வண்டி கிளம்பும் போதும் மூன்று முறை கைகளைதட்டி நன்றி கூறி வழி அனுப்பி வைத்தனர்.

Advertisment

Fire accident Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe