திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பாலமுருகன்(13). பாலமுருகன் வீட்டில் இருந்த போது மண்ணெண்ணெய் கேன் கவிழ்ந்து, மண்ணெண்ணெய் விளக்கு மீது ஊற்றியதால் ஒருசில நொடிக்குள் தீ பற்றி, குடிசை வீடு முழுவதும் தீ பரவி சிறுவன் மீதும் தீ பற்றி எரிந்துள்ளது.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து சிறுவனை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.