Advertisment

தாயுடன் 3 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழப்பு: கொலையா? தற்கொலையா? என போலீஸ் விசாரணை

Fire

Advertisment

குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகளுடன் தாயும் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கீழக்குண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவருக்கு தனலட்சுமி (30) என்ற மனைவியும், கமலேஷ்வரன் (7), விஷ்ணுபிரியன் (5), ருத்ரன் (1) ஆகிய மூன்று குழந்தைகளும் உள்ளனர். கூரை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 5.30 மணியளவில் இளங்கோவனின் தகப்பனார் கடையில் டீ வாங்கி விட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது தனது மருமகள் மற்றும் குழந்தைகள் தங்கி இருந்த கூரை வீடு தீப்பற்றி எரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisment

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளார். பதறிப்போய் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை போராடி அணைத்துள்ளனர்.

ஆனால் அதற்குள் தீ வீடு முழுவதும் பரவியதால் 3 குழந்தைகள் உட்பட தனலட்சுமியும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் 4 பேர் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பதுடன், கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தீயில் 3 குழந்தைகளுடன் தாயும் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

children death fire house mother
இதையும் படியுங்கள்
Subscribe