Fire at 2 restaurants in mogappair

Advertisment

முகப்பேரில் அடுத்தடுத்து இரண்டு உணவகங்களில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேரில் பேருந்து நிலையம் எதிரே உள்ள துரித உணவகம் மற்றும் அதனருகே இருந்த மற்றொரு உணவகம் உள்ளிட்ட இரண்டு உணவகத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து கோயம்பேடு மற்றும் அண்ணாநகரில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைந்தனர்.முதற்கட்ட விசாரணையில் மின்கசிவின்காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.