f

கும்பகோணம் அருகே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியை கொலைசெய்த கணவனை போலீஸார்கைது செய்தனர்.

Advertisment

கும்பகோணம் அருகில் தி.மாங்குடி கிராமத்தில் வசிப்பவர் வீரப்பன் மகன் முருகானந்தம் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி நிர்மலா(28) இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisment

கடந்த 6-ந் தேதி மதியம் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து தன் மனைவி நிர்மலாவிடம், ஏன் இன்னும் சமையல் செய்யவில்லை என தகராறு செய்துள்ளார். அதற்கு மனைவி, "நீ என்ன வாங்கித் தந்தாய் சமைப்பதற்கு" என கேட்டுள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த முருகானந்தம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து தன் மனைவி நிர்மலா மீது ஊற்றி தீவைத்து கொளுத்திவிட்டார்.

தீப்பிடித்து எரிந்த நிர்மலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக ஓடிவந்து தீயை அனைத்து நிர்மலாவை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

Advertisment

அங்கு சிகிச்சையில் இருந்த நிர்மலா பலனின்றி அதிகாலை இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா கொலை வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவன் முருகானந்தத்தை நேற்று கைது செய்தனர்.